கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
"உங்கள் உடம்பில் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறதா? அப்போ இந்த பிரச்சனைகள் இருக்கலாம்!"

நம் உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதற்கான சில அறிகுறிகள் நம் உடலே நமக்குக் காட்டிக் கொடுக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம். அதிகம் பசிக்கிறது என்றால் உடலில் இன்சுலின் அதிகம் சுரக்கிறது என்று அர்த்தம். இது சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறி.
முகத்தில் அரிப்பெடுத்தால் கூந்தலில் சுத்தமில்லை என்று அர்த்தம். வயிற்று வலி இருந்தால் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என்று அர்த்தம். கண்களோ, மூக்கோ தொடர்ந்து அரித்தால் ஜலதோஷம் பிடிக்கப்போகிறது என்று, கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால் உடலில் அதீத சூடு என்றும் அர்த்தம்.
முழங்காலில் வலி ஏற்பட்டால் உடல் எடை கூடிவிட்டது என்று அர்த்தம். தொடர்ந்து முதுகுத்தண்டு வலிக்குமானால், எலும்புத் தேய்மானம் தொடங்குகிறது என்று அர்த்தம். தோள்பட்டை, முதுகு, குதிகால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் உடலில் வாயு தேங்கியுள்ளது என்று அர்த்தம்.
உதட்டில் வெடிப்பு, பிளவு ஏற்பட்டால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிட்டது என்று அர்த்தம். காதில் அதீத குடைச்சலோ, வலியோ வந்தால் காய்ச்சல் வரப்போகிறது என்று அர்த்தம். கைமடிப்பு, கழுத்து மடிப்பில் கருப்பான பட்டை விழுந்தால் இன்சுலின் அதிகமாக சுரக்கிறது என்று அர்த்தம்.