இந்தியா லைப் ஸ்டைல்

இளைஞனின் உயிரைப் பறித்த செல்போன். என்ன ஒரு கொடுமை, கலிகாலம்டா... சாமி!!

Summary:

suside attempt youth delhi

குடும்பத்தில் செல்போன் பயன்படுத்துவதில் தங்கையுடன் ஏற்பட்ட பிரச்சினையால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி, துவாரகா அருகே பிந்தாபூர் என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வருபவர் ரன்பீர் சிங். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பிள்ளைகள் உள்ளனர். மூத்த பையன் பெயர் குல்ஷன் ஷெராவத் 17 வயதாகும் அவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு குல்ஷன் ஷெராவத்துக்கும் அவருடைய தங்கைக்கும் வீட்டிலிருந்த ஒரு செல்போனை யார் பயன்படுத்துவது என்பதில் பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் அந்த செல்போனை இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்து சண்டையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த குல்ஷன் ஷெராவத் செல்போனை பிடுங்கி ஓங்கித் தரையில் அடித்ததில் சுக்குநூறாக தெறித்தது.

Image result for suicide attempt

செல்போனை உடைத்தவர் கோபமாக வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் எங்கே போகிற போகிறான் திரும்பி வந்துவிடுவான் எந்த எண்ணத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கதவை திறந்த பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால் வீட்டின் முன்பு தனது நெற்றியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை அவரது குடும்பத்தினர் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டது இதை அறிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நாட்டு துப்பாக்கியை அவர் பயன்படுத்தியதாகவும் மீதம் நான்கு குண்டுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.


 


Advertisement