சூப்பர் ஸ்டாரின் திடீர் ஆட்டோ பயணம்; மகிழ்ச்சி அடைந்த பேரன்; குவிந்து வரும் பாராட்டுக்கள்.!
சூப்பர் ஸ்டாரின் திடீர் ஆட்டோ பயணம்; மகிழ்ச்சி அடைந்த பேரன்; குவிந்து வரும் பாராட்டுக்கள்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேரனுடன் ஆட்டோவில் பயணம் செய்து தனது பேரனின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் பேட்ட இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பியவுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மகளது இல்லமான தனுஷ் வீட்டிற்கு புறப்பட தயாரானார். அப்பொழுது பேரன் வேத் ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதனால் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தனது பேரனின் ஆசையை நிறைவேற்றம் விதமாக தனது பேரனுடன் மருமகன் தனுஷ் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
இதனால் ரஜினிகாந்தின் பேரன் வேத் மிகவும் சந்தோசம் அடைந்துள்ளார். நடிகர் தனுஷ் இல்லத்தில் இரண்டு மணி நேரம் இருந்த ரஜினிகாந்த் மீண்டும் தனது தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு காரில் திரும்பியுள்ளார். தனது பேரனின் ஆசையை நிறைவேற்ற ஆட்டோவில் பயணித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.