உங்க கணவருக்கு இந்த கீரையை செஞ்சி கொடுங்க.. அந்த விஷயத்தில் அசத்திடுவார்.!

சமீப காலமாகவே குழந்தையின்மைக்காக சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையானது குறைந்து அவர்களுக்கு குழந்தை பெறக்கூடிய தகுதி இல்லாத சூழல் உருவாகி கொண்டிருக்கிறது.
தாம்பத்தியத்தில் ஈடுபடுவதிலும் அவர்களுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் நமது உணவு பழக்க வழக்கம் மாறி போய்விட்டது தான். விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த சில உணவுகளை எடுத்துக் கொள்வது அதனை சரி செய்யும்.
கீரைகளில் அதிகப்படியான மெக்னீசியம், செலினியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. தூதுவளை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி, பசலை கீரை மற்றும் முருங்கைக்கீரை ஆகியவற்றை நமது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கீரைகள் விந்தணுக்களின் தரத்தை மற்றும் எண்ணிக்கையை உயர்த்தும்.
இதையும் படிங்க: உயிரையே காக்கும் பழங்கள்.. கோடைகாலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டியவை.!
மேலும், உடல் உறவில் நாட்டம் இல்லாதவர்களுக்கும் இது சிறந்த தீர்வாக இருக்கும். இந்த கீரைகளை தேங்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து பொரியலாக சாப்பிடலாம். இந்தக் கீரையை சமைக்க கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும்.
இதையும் படிங்க: உடல் சூட்டை குறைக்க வெந்தயக் களி.! சர்க்கரை நோயாளிகளுக்கு சூப்பர் ரெசிபி.!