வர்த்தகம் லைப் ஸ்டைல்

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! இனி வாகனம் ஓட்டும்போது ஜாலியா ஓட்டுங்க!

Summary:

Smart helmet for bike riders can make phone calls hear songs

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே செல்கிறது. தொழில்நுட்பம் வளர வளர அதை சார்ந்த கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சித்தரும் விதமாக ஸ்மார்ட் ஹெல்மெட் ஒன்றை தயாரித்துள்ளது ஸ்டீல் பேர்ட் நிறுவனம்.

நாளுக்குநாள் அதிகரித்துவரும் வாகன நெரிசலில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. அதிகம் விபத்துகளில் சிக்குவது இருசக்கர வாகன ஓட்டிகள்தான். வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாமல் இருப்பதே உயிரிழப்புகள் அதிகம் நடைபெற காரணமாக அமைகிறது.

அதிலும் சிலர் வாகனம் ஓட்டும்போதே பாட்டு கேட்பது, போன் பேசுவது போன்ற காரணங்களால் விபத்துகள் இன்னும் அதிகரிக்கிறது. தற்போது அதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் வந்துள்ளது ஸ்மார்ட் ஹெல்மெட்.

இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் மூலம் வாகனம் ஓட்டும் பொது நீங்கள் பாட்டு கேட்கலாம், போன் பேசலாம். மேலும் டிராஃபிக் சமயங்களில் ஃபோன் பேசினால் சத்தம் இடையூறு இல்லாமல் பேசுவதற்கு ஏதுவாக ஹெல்மெட் உடன் சிறு மைக் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் சிறப்பு என்னவென்றால் இந்த ஹெல்மெட்டிற்கு தனியாக சார்ஜ் செய்ய தேவை இல்லை. AUX வசதி கொண்ட தொலைபேசியுடன் இந்த ஹெல்மெட்டை இணைத்துக்கொள்ள முடியும். மேலும் வேண்டிய நேரத்தில் கனெக்ட் மற்றும் டிஸ்கனெக்ட் செய்யவும் முடியும்.

சிகப்பு, கருப்பு, வெள்ளை நிறங்களில் இந்த ஹெல்மெட் கிடைக்கிறது. மேலும் சந்தோசமான விஷயம் என்னவென்றால் இந்த ஹெல்மெட்டின் விலை வெறும் 2,500 இல் இருந்தே கிடைக்கிறது.

கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்த வெறித்தனமான ஆய்வில் இந்த ஹெல்மெட் தற்போது விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது ஸ்டீல் பேர்ட் நிறுவனம்.


Advertisement