இந்த 2 நிலைகளில் நீங்கள் எந்த நிலையில் அதிகமாக தூங்குவீர்கள்? அதை பொறுத்து உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அறியலாம்!



sleeping-position-and-personality

தினசரி தூக்க முறைகள் நம் ஆளுமையை வெளிப்படுத்தும் முக்கியமானவைகளில் ஒன்று என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் முதுகில் தூங்குகிறீர்களா அல்லது வயிற்றில் தூங்குகிறீர்களா என்பதைப் பொறுத்து, உங்கள் ஆழ்மனதில் உள்ள சிந்தனைகள் மற்றும் பண்புகள் வெளிப்படுகின்றன.

தூக்கம் மற்றும் ஆளுமை இடையிலான தொடர்பு

நம் ஆழ்மனம் தான் நம்மை முழுநாளும் வழிநடத்துகிறது. நாம் பேசும் விதம், நடக்கும் முறை, விருப்பங்கள் மற்றும் நமது தூக்க பாணி என அனைத்திலும் அதன் தாக்கம் உள்ளது. நரம்பியல் மற்றும் தூக்க அறிவியல்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், தூக்க நிலை நம்முடைய புறம்போக்குத்தனம், மனசாட்சிப் பாணி, உடன்பாடு மற்றும் திறந்த தன்மை போன்ற ஆளுமைப் பண்புகளை வெளிக்கொணருகிறது.

தூக்கம் personality

முதுகில் தூங்குபவர்களின் ஆளுமை

நீங்கள் முதுகில் தூங்குகிறவராக இருந்தால், நீங்கள்,

தன்னம்பிக்கை நிறைந்தவர்

சமூகத்தில் வலுவாக திகழ்பவர்

ஒரே நேரத்தில் பல விஷயங்களை கவனிக்க வல்லவர்

தூக்கம் personality

கவர்ச்சியான பேச்சாளராகவும், முடிவெடுப்பாளராகவும் இருப்பவர்.

திட்டடமிடலில் நிபுணர், வாழ்க்கையை திட்டமிட்டு வாழ்பவர்

வயிற்றில் தூங்குபவர்களின் பண்புகள்

நீங்கள் வயிற்றில் தூங்குகிறவராக இருந்தால், நீங்கள்,

வெளிப்படையாக தன்னை காட்டும் தன்னம்பிக்கை உடையவர்

சிலருக்கு பதட்டம், பயம் போன்ற உணர்வுகள் அதிகம்

தூக்கம் personality

விமர்சனங்களை ஏற்க இயலாத நிலை ஏற்படக்கூடும்

புதிய யோசனைகள் மீது பிடிவாதம் காட்டக்கூடியவர்

உணர்ச்சி ரீதியாக தீர்மானிக்கக்கூடியவர்

வாழ்க்கையின் நோக்கங்களை தெளிவுபடுத்த முயலும் தன்மை உடையவர்

நம் தூக்க நிலை ஒரு சாதாரண பழக்கமாக தெரியலாம். ஆனால், அது நம் உள்ளார்ந்த ஆளுமையை உணர வழிகாட்டும் ஒரு சுய பரிசோதனையாகும். உங்கள் தூக்க பாணியை கவனித்து, உங்கள் ஆளுமையை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள முயலுங்கள்.

இதையும் படிங்க: இந்த உணவுகளை எல்லாம் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடக்கூடாது? மீறி சாப்பிட்டால் விஷமாக கூட மாறலாம்!

 

 

இதையும் படிங்க: மாதவிடாய் நாட்களிலும் முடிந்த அடுத்த நாளும் பெண்கள் என்னென்ன சாப்பிடணும் தெரியுமா? சாப்பிட்டால் இந்த பிரச்சனை வராதாம்! இனி தெரிஞ்சுக்கோங்க...