மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பழங்கள் தருவதால் சளி தொல்லை ஏற்படுமா.. மருத்துவர்களின் அறிவுரை.!?

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கலாமா?
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பழங்கள் தருவது நல்லது. பழங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. சில பழங்கள் குளிர்காலத்தில் நன்மைகள் தருவதோடு, குழந்தையின் உடல் நலத்திற்கும் உதவுகின்றன. மேலும் குளிர் காலத்தில் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம் என்பதையும் மருத்துவரின் அறிவுரை என்ன என்பதையும் குறித்து பார்க்கலாம்
ஆப்பிள் - குளிர் காலத்தில் அதிகமாக ஆப்பிள்கள் கிடைக்கின்றன. இதில் அத்தியாவசிய கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளதால் இதனை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இதையும் படிங்க: Tips :நறுக்கிய பழங்கள் நிறம் மாறாமல் பாதுகாக்க என்ன செய்யலாம்.!?
முலாம் பழம் - இவை குழந்தைகளுக்கு நல்ல புரதம் மற்றும் விட்டமின் சி வழங்குகின்றன.
வாழைப்பழம் - இதில் மிகுந்த காலோரிகள் மற்றும் கனிமங்கள் தாதுக்கள் உள்ளதால் குழந்தைகளுக்கு தேவையான ஊட்ட சத்து கிடைக்கும்.
சப்போட்டா, பப்பாளி - இவை அதிகளவில் விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடெண்ட்களைக் கொண்டுள்ளன என்பதால் குளிர் காலத்தில் ஏற்படும் நோய்களிடம் இருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
குழந்தைகளுக்கு பழங்கள் கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
ஆனால், குளிர்காலத்தில் சில பழங்கள் உடல் சோர்வு, மலச்சிக்கல், செரிமான பிரச்சனை போன்ற பாதிப்புகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது. எனவே பழங்களை குறிப்பிட்ட அளவிற்கு குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: தூக்கமின்மையை சரி செய்ய மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த 5 பழங்கள் போதும்.!?