விமானத்தில் இருக்கும் ரகசிய படுக்கை அறை! எதற்காக பயன்படுகிறது தெரியுமா?

விமானத்தில் இருக்கும் ரகசிய படுக்கை அறை! எதற்காக பயன்படுகிறது தெரியுமா?


Secret rooms in flights

விமான பயணம் என்றாலே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். அதேபோல, விமானங்களில் இருக்கும் பல்வேறு ரகசியங்கள் குறித்தும், அதனுடைய பகுதிகள் குறித்தும் நமக்கு பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுபோன்ற ரகசியங்களில் ஒன்றுதான் இந்த ரகசிய அறை.

பொதுவாக நீண்ட தூர பயணம் செய்யும் விமானங்களில் இந்த ரகசிய அறையினை காண முடியும். பயணிகளை பொறுத்தவரை நீண்ட தூர பயணத்தின் போது புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது இப்படி தங்கள் பயண நேரத்தை கழிப்பார்கள்.

Airplane

அதேபோல, நீண்ட தூர பயணத்தின் போது விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கும் ஓய்வு தேவை அல்லவா? அதற்காகத்தான் இந்த ரகசிய அறைகள் பயன்படுத்த படுகிறது. குறிப்பிட்ட பணிப்பெண்கள் பணியில் இருக்கும்போது மற்றவர்கள் அந்த ரகசிய அறையில் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ரகசிய அறையானது பிசினஸ் வகுப்பிற்கு மேலே காக்பிட்டிற்கு பின்னல் அமைக்கப்பட்டிருக்கும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நீண்ட தூர பயணம் செய்யும் விமானங்களில் ஒரே நேரத்தில் 8 பேர் வரை ஓய்வு எடுக்கும் அளவிற்கு இட வசதி உள்ளதாம்.

Airplane