அதிகரித்து வரும் விந்தணு குறைபாடு பிரச்சனை.? அதிர்ச்சியில் ஆண்கள்.? என்ன தீர்வு.!?
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கத்தினாலும், அதிகரித்து வரும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைமுறையினாலும் பல வகையான நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதில் குறிப்பாக பல தம்பதியர்களும் சந்தித்து வரும் பிரச்சனைதான் ஆண்மை குறைபாடு. இந்த ஆண்மை குறைபாடு பிரச்சனையினால் பலருக்கும் குழந்தையின்மை, இல்லற வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் போவது போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
இதன்படி வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 45 ஆண்டுகளில் ஆண்களுக்கு 50 சதவீதம் விந்தணு உற்பத்தி குறைபாடு பிரச்சனை உருவாகி இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பிரச்சனைக்கு நவீன காலகட்டத்தின் உணவு பழக்க வழக்கங்கள் முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது.
மேலும் human reproduction update என்ற நாளிதழில் ஆண்களின் விந்தணு உற்பத்தி கடந்த வருடங்களில் எந்த அளவு குறைந்துள்ளது என்பது குறித்து சர்வே வெளியாகியுள்ளது. இதன்படி 1973 முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை 50% ஆக குறைந்துள்ளது. பல நாடுகளில் உள்ள ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி சோதனை நடத்தப்பட்டு இந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.
குறிப்பாக 53 நாடுகளில் உள்ள ஆண்களின் விந்தணுவை சோதனை செய்ததில், இந்தியாவில் உள்ள அதிகளவு ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடு பிரச்சனை அதிகமாக உள்ளதாக கூறியுள்ளனர். இச்செய்தி இணையத்தில் வேகமாக பரவி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.