லைப் ஸ்டைல்

என்னடா இது இந்த எலிக்கு வந்த சோதனை! இந்த நிலைமை இந்த உயிரினத்திற்கும் வரக்கூடாது! வீடியோவை பாருங்கள்!

Summary:

Rat struggling

அன்றாட வாழ்வில் மனிதர்களே செய்ய கூடாத விஷயங்களைச்செய்து மாட்டிக்கொள்கின்றனர். ஆறறிவு உள்ள மனிதர்களே இவ்வாறு செய்யும்போது ஐந்தறிவு ஜீவன்களுக்கு சொல்லவா வேண்டும். 

ஆடு, மாடு, நாய் போன்ற உயிரினங்கள் தண்ணீர் குடிக்கும்போது குடத்திற்குள் தலையை விட்டு தண்ணீர் குடித்துவிட்டு பிறகு தலையை வெளியே எடுக்க முடியாமல் மாட்டிக்கொண்டு திண்டாடும் வீடியோவை இணையத்தில் பார்த்திருப்போம்.  அதிலும் சமீபத்தில் நல்ல பாம்பு ஒன்று டின் பீர் டப்பாவிற்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்ட வீடியோ அதிகமாக வைரலானது.

இந்தநிலையில் தற்போது வியக்கவைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  அந்த எலி சமயலறையில் உள்ள முட்டைக்குள் தலையை விட்டு பிறகு தலையை எடுக்கமுடியாமல் திண்டாடும் வீடியோ தான் அது. அந்த வீடியோவிற்கு சமீபத்தில் சிறுவன் ஒருவன் "அயோ.. அம்மோ..  என்னை காப்பற்றுங்கள்" என அழுகும் ஆடியோவை இணைத்துள்ளனர். 

அந்த வீடியோவில் எலி படும் பாடு.  கஷ்டத்தை ஏற்படுத்தினாலும் அதற்காக இணைக்கப்பட்ட ஆடியோ அனைவரையும் சிரிக்கவைத்துள்ளது. மேலும் இந்த வீடியோவை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். 


Advertisement