உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சுவையான பூசணிக்காய் கட்லெட் செய்வது எப்படி...



pumpkin-cutlet-recipe-in-tamil

பொதுவாக பூசணிக்காய் சமைத்து சாப்பிட்டு தான் பார்த்திருப்போம். இங்கு சுவையான பூசணிக்காய் கட்லெட் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
துருவிய பூசணிக்காய் - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 1
சோளமாவு - 2 டீஸ்பூன் 
அரிசி மாவு - 2 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
கறி மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் 
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சம்பழச்சாறு - 1 டீஸ்பூன் 
பிரட்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

pumpkin cutlet

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்‌. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். துருவிய பூசணிக்காயை சிறிது நேரம் இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி மசாலா தூள், மிளகு தூள், எலுமிச்சம்பழச்சாறு, அரிசி மாவு, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொண்டு கட்லெட் வடிவில் செய்து வைத்து கொள்ளவும்.

பின்னர் கட்லெட்டை பிரட் துகளில் நனைத்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கட்லெட்டை அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அவ்வளவு தான் சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார்.