இந்த மாத்திரைகளை அதிகமாக எடுக்காத்தீங்க...! பாதிப்பு பலமாக இருக்கும்... மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை..!!!



painkillers-kidney-risk-antibiotic-self-medication

காய்ச்சல், உடல் வலி போன்ற சாதாரண உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருத்துவரின் ஆலோசனையின்றி தொடர்ந்து வலி நிவாரண மருந்துகளை உட்கொள்வது சிறுநீரகங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது. தேவையற்ற மற்றும் நீண்டகால பயன்பாட்டால் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி நிவாரண மாத்திரைகளில் கவனம் தேவை

வலி மற்றும் காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் சில மருந்துகளை நீண்ட நாட்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்வது உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இதனால் நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப குறைந்த அளவு மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என புதிய வழிகாட்டுதலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தாங்களாகவே மருந்துகளை வாங்கி தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்த மாத்திரகள் சிறுநீரகங்களை செயலிழக்கும் அபாயம் உண்டு...! மத்திய அரசு வெளியிட்ட கீர் எச்சரிக்கை...!!!

ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் கட்டுப்பாடு

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவதும் கவலைக்குரியதாக உள்ளது. தேவையற்ற முறையில் இவற்றை உட்கொள்வது நோய்க்கிருமிகளிடம் மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும். இதனால் எதிர்காலத்தில் சில தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பது சிக்கலாகலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மருந்தகங்களுக்கு கடும் உத்தரவு

இதையடுத்து, முறையான மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் Schedule H மற்றும் H1 வகை மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருந்துகளை தேவைக்கேற்பவும், மருத்துவ ஆலோசனையுடனும் பயன்படுத்துவது மட்டுமே பாதுகாப்பான நடைமுறை என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.