மலட்டு தன்மையை போக்கும் அத்திப்பழம்!,..தினந்தோறும் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?.. தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

மலட்டு தன்மையை போக்கும் அத்திப்பழம்!,..தினந்தோறும் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?.. தெரிஞ்சுக்கலாம் வாங்க..!


numerous-benefits-to-eating-figs-daily-to-help-with-blo

ரத்த விருத்திக்கு உதவும் அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிடுவதால் எண்ணற்ற பலன்களை பெறலாம்.

அத்திப்பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்ற உதவுகிறது. சிறுநீரகத்தில்  கல் அடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றி சிறுநீரகத்தை சுத்திகரிக்கிறது.

அத்திப்பழம் நார்ச்சத்தும், தாதுக்களும் நிறைந்த பழமாக உள்ளது. இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-எல், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் கலந்து இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு அத்திப்பழம் சிறந்த மருந்தாக இருக்கும்.

அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்களுக்கு மலடு நீங்கும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம். இதனை உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டு சாப்பிடுவதும் மிகுந்த பயனை தரும்.

அத்திப்பழத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் புதிய செல்களை உருவாக்கும் திறன் கொண்டது. மேலும், தொடர்ந்து அத்திப்பழத்தை சாப்பிடும் ஆண்களின் முகத்தில் சுருக்கங்கள் இருக்காது.  ஆண்களின் விந்து அணுக்களின் தரத்தை அத்திப்பழம் மேம்படுத்துகிறது.

அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படாது. அத்திப்பழம் நார்ச்சத்து நிறைந்தது, இதன் காரணமாக மலச்சிக்கலுக்கு அருமருந்தாக உள்ளது. வெறும் வயிற்றில் உலர்ந்த அல்லது பழுத்த அத்திப் பழங்களை தினந்தோறும் 2 சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

அத்திப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுவதால் இதயத்திற்கு தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் தேவையற்ற கொழுப்பு உடலில் தங்காது.