நோனி பழம் பற்றி தெரியுமா.. இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது பார்க்கலாம் வாங்க.?



Noni fruits benefits

நோனி பழம் என்பது பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்து வருகிறது. இந்த பழத்தை பல்வேறு வகையான நோய்களை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பழம் உண்பதன் மூலம் என்னென்ன நோய்களை தீர்க்கலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

Noni

ஆஸ்திரேலியா காடுகளில் மொரிண்டா சிட்ரிஃபோலியா என்ற மரத்தில் வளரும் நோனி பழம், பெர்ரி வகையைச் சார்ந்ததாகும். இந்த மரத்தின் பழங்கள் மட்டுமல்லாது வேர்கள், இலைகள் போன்றவைகளும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

Noni

இந்த நோனிபழம் உடலில் ஏற்படும் புற்று நோயின் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டவர்கள் நோனி பழத்தை உண்டு வந்தால் புற்று நோய் மேலும் பரவாது என்று கூறப்பட்டு வருகிறது.  மேலும் தோல் நோய்களிலிருந்தும், வயிற்றில் வாயு உருவாகாமல் இருக்கவும் இந்த பழம் உபயோகமாக உள்ளது.