வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
நைட் ஷிப்ட் வேலை செய்பவரா நீங்கள்.? இந்த உணவுகளால் உங்களுக்கு ஆபத்து வரலாம்.!!
தற்காலத்தில் பகலில் பணிபுரிவதைப் போலவே இரவில் கண் விழித்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. இந்த மாறிவரும் வாழ்க்கை சூழலால் மனிதனுக்கு பல்வேறு விதமான உடல் நல மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இரவில் பணிபுரிபவர்கள் தங்கள் உடல் நலனை பேண கட்டாயம் பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்க வழக்கங்களை இந்தப் பதிவில் காணலாம்.
சீக்கிரமாக இரவு உணவை சாப்பிடுங்கள்
உங்களது பணி 7:00 மணிக்கு தொடங்கினால் அதிகபட்சம் 7:30 - 8:00 மணிக்குள் உங்கள் இரவு உணவை சாப்பிட்டு விடுங்கள். உங்கள் நேரத்தை வேலை ஆக்கிரமிக்கும் முன் உங்கள் உணவை சாப்பிடுங்கள். விரைவாக இரவு உணவு உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
செரிமானத்திற்கு இலகுவான உணவை தேர்ந்தெடுங்கள்
இரவு நேர வேலைக்கு செல்பவர்கள் எளிதில் ஜீரணமாகும் அரிசி, நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்ததாகும். மேலும் இவற்றுடன் நட்ஸ் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்வது இரவு தூங்கவிடாமல் வைத்திருப்பதோடு பசி ஏற்படாமலும் தடுக்கும் .
இதையும் படிங்க: மக்களே உஷார்... தேயிலை தூளால் புற்று நோய்க்கு வாய்ப்பு.!! சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை.!!
குறைந்த அளவிலான டீ மற்றும் காபி பருகுங்கள்
இரவு நேரங்களில் வேலை செய்பவர்கள் தூக்கம் வருவதை தடுப்பதற்காக அதிகமாக டீ மற்றும் காபி போன்ற பானங்களை அருந்துவார்கள். இவை தலைசுற்றல், வாந்தி, குமட்டல் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே டீ மற்றும் காபிக்கு பதிலாக பழச்சாறுகளை அருந்தலாம் அல்லது ஒரு நாளைக்கு 1 அல்லது 2 டீ அல்லது காபி அருந்தலாம்.
அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவை தவிருங்கள்
நைட் ஷிப்ட் வேலைக்கு செல்பவர்கள் எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதாகும். இரவில் பணிபுரிபவர்கள் அதிகமான ஆயில் மற்றும் ஃப்ரை செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் உடல் பருமன் அதிகரிப்பு உயர் ரத்த அழுத்தம் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படவும் அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.
இதையும் படிங்க: அடடே... சுவையும் சத்தும் நிறைந்த பீட்ரூட் கோளா உருண்டை.!! சூப்பர் ரெசிபி.!!