மழைக்காலத்தில் சாப்பிக்கூடாத 7 ஆபத்தான உணவுகள்! என்னென்ன தெரியுமா?



monsoon-health-foods-to-avoid

மழைக்காலம் இனிமையான மாற்றமாக இருந்தாலும், உடல்நலம் பாதிக்கப்படும் நேரமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக உணவு பாதுகாப்பு மீது கவனம் செலுத்துவது இந்தக் காலத்தில் மிக முக்கியமானதாகும்.

தெருவோர உணவுகளை தவிர்க்க வேண்டியது ஏன்?

மழைக்காலத்தில் தெருவோர உணவுகள் மிகவும் ஆபத்தானவை. சுத்தமற்ற நீர் மற்றும் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், சமோசா, பஜ்ஜி, வடை போன்ற Street Foods ஜீரணிக்க கடினமாக இருக்கும். குறிப்பாக பானி பூரி போன்ற உணவுகள் டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திடும்.

இதையும் படிங்க: சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பதால் ஆபத்தா? பொதுவான பழக்கம் பெரிய பிரச்சனை ஆகுமா! அவசியம் தெரிஞ்சிக்கோங்க...

பச்சை காய்கறிகளின் அபாயம்

கீரை, முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்ற பச்சை காய்கறிகளில் மழைநீர் ஏத்துவதால் கிருமிகள் அதிகப்படியாக ஒட்டும். இவை நன்றாக சுத்தம் செய்யாவிட்டால் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். காய்கறிகளை உப்பு கலந்த வெந்நீரில் கழுவி வேகவைத்தும் தான் பயன்படுத்த வேண்டும்.

சாலட் மற்றும் பச்சை உணவுகள்

சமைக்கப்படாத கேரட், வெள்ளரிக்காய் போன்ற சாலட் வகைகள் மழைக்காலத்தில் விரைவாக கெட்டுப்போகும். பாக்டீரியா உடலுக்குள் சென்றுவிடும் அபாயம் உள்ளது. ஆதலால் இந்த உணவுகளை தவிர்ப்பது சிறந்த பாதுகாப்பாகும்.

வெளியில் வெட்டப்படும் பழங்கள் மற்றும் ஜூஸ்

சாலையோரங்களில் வெட்டி வைக்கப்படும் பழங்கள் மற்றும் ஜூசுகள் தூசி, ஈக்கள் மற்றும் சூழல் அசுத்தத்தால் மிகவும் ஆபத்தானவை. ஜூஸ் வேண்டுமென்றால் வீட்டிலேயே புதிதாக தயார் செய்து உடனடியாக அருந்தவேண்டும்.

கடல் உணவுகளை குறைக்க வேண்டிய அவசியம்

மழைக்காலம் மீன்களின் இனப்பெருக்க காலமாக இருப்பதால், கடல் உணவுகள் நச்சுத்தன்மை உடையதாக இருக்கக்கூடும். நீரின் தரமும் பாதிக்கப்படும் என்பதால், இந்த நேரத்தில் மீன் உணவுகளைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

பால் மற்றும் பால் பொருட்கள்

பால், தயிர், மோர் போன்ற பால் சார்ந்த பொருட்கள் மழைக்காலத்தில் விரைவாக கெட்டுப்போகும். அவற்றை புதிதாக தயாரித்து உடனே பயன்படுத்துவது மட்டுமே ஆரோக்கியமான நடைமுறையாகும்.

மழைக்காலத்தில் ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவில் சிறு முன்னெச்சரிக்கை கூட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

இதையும் படிங்க: பன்னீர் அதிகமாக சாப்பிட்டால் இவ்வளவு பக்கவிளைவுகள் வருமா! என்னென்ன தெரியுமா?