லைப் ஸ்டைல் சமூகம்

வாட்ஸ் அப்பால் நின்று போன திருமணம்; வேதனையில் பெண் வீட்டார்

Summary:

marriage stopped due to over usage of whatsapp

மணப்பெண் அதிக நேரம் வாட்ஸ் அப் பயன்படுத்தியதால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகமானபின், ஆண்களை விட பெண்கள் தனது நேரத்தை போனிலே செலவிட தொடங்கிவிட்டனர். அதுவும் மொபைல் டேட்டாக்கள் குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்தபின் எந்நேரமும் ஆன்லைனிலே இருக்கும் பழக்கம் வந்துவிட்டது.

whatsapp க்கான பட முடிவு

அதிலும் இந்த வாட்ஸ் அப் ஆதிக்கம் பெரிதும் பரவிவிட்டது. நேரில் பார்த்து பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வாட்ஸ் அப் மூலம் பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவலம் பலரின் மனதை புண்படுத்துவது போன்றே இருக்கும்.

இதே போன்ற சூழ்நிலையால் தான் உத்திரப்பிரதேசத்தில் ஒரு திருமணமே நின்று விட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள நௌகௌன் சதட் எனும் கிராமத்தில் மெகந்தி என்பவரது மகளுக்கும், கமார் ஹைதர் என்பவரது மகனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் நடைபெறும் தினத்தன்று மணப்பந்தலில் பெண் அமர்ந்திருந்தார். மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்களுக்காக பெண் வீட்டார் அனைவரும் காத்திருந்தனர். இதனால் மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏன் மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை என அனைவரும் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

bride sitting for marriage in utter pradesh க்கான பட முடிவு

எனவே பெண்ணின் தந்தை மெகந்தி, மாப்பிள்ளையின் தந்தை ஹைதரை தொடர்புகொண்டு பேசினார். அப்போது பேசிய ஹைதர், இந்த திருமணத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். காரணம் என்னவென்று கேட்டதற்கு 'மணப்பெண் அதிக நேரம் வாட்ஸ் அப்பிலேயே மூழ்கி இருப்பதால் தங்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை' என அவர் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பெண் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதைத்தொடர்ந்து, வரதட்சனையாக மாப்பிள்ளை வீட்டார் ரூ.65 லட்சம் கேட்டார்கள், அதை மனதில் வைத்தே இப்போது திருமணத்தை நிறுத்தியுள்ளனர் என மெகந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், மாப்பிள்ளை வீட்டாரோ, பெண்ணுக்கு அதிக நேரம் வாட்ஸ் அப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. திருமணத்திற்கு முன்பாகவே எங்களது உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அவர் பல்வேறு செய்திகளை அனுப்பியுள்ளார். மணப்பெண் வாட்ஸ் அப்க்கு அடிமை ஆனது போல் இருந்ததால் நாங்கள் திருமணத்தை நிறுத்திவிட்டோம் என தெரிவித்தனர்.

தொடர்புடைய படம்

இப்படி வாட்ஸ் அப்பால் ஒரு திருமணம் நின்று போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் எது இலவசமாக கிடைத்தாலும் தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதே சிறந்தது என்று புரிகிறது. 
 


Advertisement