"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
நார்ச்சத்து மிக்க தேங்காய் மாங்காய் சட்னி... வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?..!
உணவில் மாங்காய் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க இயலும். தொடர்ந்து நார்ச்சத்து கிடைப்பதற்கு தேங்காயை பச்சையாக சாப்பிட வேண்டும்.
தேவையான பொருட்கள் :
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தோல்நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டு பச்சை மிளகாய் - 1
கடுகு - 1/4 தேக்கரண்டி
செய்முறை :
★முதலில் பச்சை மிளகாய், தேங்காய், மாங்காய், கருவேப்பிலை, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
★பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும், கருவேப்பிலை, கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.
★இறுதியாக அதனை சட்னியில் சேர்த்து பரிமாறினால் சுவையான தேங்காய் மாங்காய் சட்னி தயார் ஆகிவிடும்.