ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
சிறுநீரக கல்லுக்கு இந்த 2 விஷயம் செமயா உதவும்.. உடனே ட்ரை பண்ணுங்க.!
சிறுநீரக கல் பிரச்சினை :
சமீப காலமாகவே சிறுநீரக கல் பிரச்சினை வருவது மிக சாதாரணமாக மாறிவிட்டது. அன்றாட உணவு பழக்கங்கள் மொத்தமாக மாறிவிட்டது கூட இதற்கு காரணமாக அமையலாம். நிறைய தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக கல் உருவாவதற்கு முக்கிய காரணமாகும். சிறுநீரக கற்களை கரைக்க பலரும் பல்வேறு வீட்டு வைத்தியங்களை மேற்கொள்வார்கள்.
ஆப்பிள்,வெள்ளரி சாறு :
அது மட்டுமல்லாமல் நிறைய மருத்துவமனைகளுக்கு அலைந்து செலவும் செய்வார்கள். சிலருக்கு ஆபரேஷன் செய்தால் கூட இந்த கற்கள் குணமடைவது இல்லை. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மீண்டும் இவை வரும். இயற்கை முறையிலேயே இந்த சிறுநீரகக் கற்களை அரைக்க உதவும் இரண்டு அற்புதமான சாறுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு ஆப்பிள், ஒரு வெள்ளரிக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, இவை அனைத்தையும் அரைத்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து இந்த சாரை அன்றாடம் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் சிறுநீர் வழியாக வெளியேறுவதை நீங்களே காணலாம். இதை ஒரு மாதம் குடித்து வர வேண்டும்.
வாழைத்தண்டு சாறு :
அடுத்ததாக வாழைத்தண்டு ஒரு துண்டு, மிளகு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன் இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வடிகட்டி இந்த நீரை குளித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து விடும். இந்த பானத்தை சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் மட்டும்தான் குடிக்க வேண்டும் என்று கிடையாது.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கவும் அனைவரும் இதை பயன்படுத்தலாம். சிறுநீரக பாதிப்புகள் இல்லாதவர்கள் வாரத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை இந்த சாறுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆரம்ப நிலை சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த முறை மிகவும் பயன்படும்.