லைப் ஸ்டைல் காதல் – உறவுகள்

கேரளா ஆன்ட்டியை கொலை செய்த மதுரை வாலிபர்! பேஸ்புக் காதலால் நிகழ்ந்த விபரீதம்

Summary:

madurai boy killed kerala aunty

கேரளாவில் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் பெண்ணின் தாயாரை மதுரையை சேர்ந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையை சேர்ந்த வாலிபர் சதீஷ். இவர் தன்னுடன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய எலிசா என்ற கேரளாவைச் சேர்ந்த பெண்ணை பல நாட்களாக காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் லிஷாவும் காதலை ஏற்று இருவரும் காதலித்துள்ளனர்.

facebook love க்கான பட முடிவு

லிசா கேரளாவில் குளத்துப்பாளையில் தன்னுடைய தாயார் மேரிகுட்டியுடன் மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார் அவரது தந்தை வர்கீஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில் லிசாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் லிசா சதீஷிடம் பேசுவதை முழுவதுமாக நிறுத்தியுள்ளார். சதீஷ் தொடர்ந்து முயற்சி செய்தும் லிசாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.
 
இதனையடுத்து லிசாவின் வீட்டிற்கு சென்ற சதீஷ் அவரது தாயார் மேரிக்குட்டியிடம் லிசாவை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு மேரிக்குட்டி தனது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

murder க்கான பட முடிவு
 
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், தான் வைத்திருந்த கத்தியால் மேரிக்குட்டியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை பற்றி அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சதீஷ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement