குபேர சிலையை வீட்டின் இந்த திசையில் வைத்துப்பாருங்கள்! அதிர்ஷ்டம் கொட்டுமாம்!

குபேர சிலையை வீட்டின் இந்த திசையில் வைத்துப்பாருங்கள்! அதிர்ஷ்டம் கொட்டுமாம்!



Kupera pommai benefits and its directions in tamil

அதிர்ஷடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிர்ஷ்டம் வரவேண்டும், செல்வம் சேரவேண்டும் எனதான் அனைவரும் ஆசை படுகின்றனர். அதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்வது உண்டு. அதிர்ஷ்ட கல் அணிவது, குபேர பொம்மை வைப்பது போன்றது வழக்கம்.

குறிப்பாக குபேர பொம்மை வைத்தால் அதிர்ஷ்டம் பெருகும் என்பது ஐதீகம். ஆனால், குபேர பொம்மையை எந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் பெரும்? எந்த திசையில் வைத்தால் துரதிஷ்டம் போகும் தெரியுமா?

கிழக்கு திசை:
வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. கிழக்கு திசையில் குபேர பொம்மையை வைக்கும்போது குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

kupera pommai

தென் கிழக்கு திசை:
சிரிக்கும் குபேரன் சிலையை ஹால், படுக்கையறை, உணவருந்தும் அறையின் தென் கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் எதிர்ப்பாராத அதிர்ஷ்டத்தையும், வீட்டின் வருமானத்தை உயர்த்திட உதவும்.

மேஜையின் மீது வைத்தல்:
சிரிக்கும் குபேர சிலையை அலுவலகத்தின் மேஜையில் அல்லது வேலை செய்யும் மேஜையின் மீதோ வைத்தால், உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிட்டும்.

மாணவர்கள் தங்கள் படிக்கும் மேஜையின் மீது குபேர பொம்மையை வைத்தால் தங்களது கல்வி திறன் அதிகரிக்க உதவும்.