கொரியன் பெண்களின் அழகு ரகசியம் இவ்ளோ தானா.? ரொம்ப ஈஸி தான்.. நாமும் பின்பற்றலாமே.!korean skin beauty secret

கொரியன் அழகில் மோகம் :
கொரியன் ஸ்கின் வேண்டும் என்று பலரும் பல்வேறு அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டு போரடித்து தூக்கி வீசி விடுகின்றனர். ஆனால், அழகு சாதன பொருட்களை விட பின்வரும் விஷயங்கள் தான் அவர்களை இளமையாகவும், அழகாகவும் வைத்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம். 

கொரியர்கள் ரகசியம் :
கொரியர்கள் பெரும்பாலும் உடல் எடை மிகவும் குறைவாக ஸ்லிம்மாக தோற்றம் அளிப்பார்கள். இவர்களது உணவு முறைதான் இவர்களது அழகின் ரகசியம். டயட் எனும் பெயரில் எந்த உணவையும் அவர்கள் ஒதுக்குவதில்லை. அதிகப்படியாக புரோட்டின் முதல் கார்போஹைட்ரேட், கொழுப்புகள் என அனைத்து உணவுகளையும் அவர்கள் சாப்பிடுகின்றனர். ஆனால், குறைந்த அளவிலான உணவை தான் அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

korean

காய்கறிகளின் முக்கியத்துவம் :
அவர்கள் எந்த அளவிற்கு வேலை செய்கிறார்களோ? அந்த அளவிற்கு மட்டும்தான் சாப்பிடுகின்றனர். அவர்களது உணவு பழக்க வழக்கத்தில் அதிகம் காய்கறிகள் தான் சேர்த்துக் கொள்கின்றனர். இந்த காய்கறிகள் தான் அவர்கள் உடல் எடையை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள உதவுகிறது. காய்கறிகள் பெரும்பாலும் நார்ச்சத்து கொண்டவை. இதில், குறைந்த கலோரி இருப்பதால் எடை இழப்புக்கு இது அதிக அளவில் உதவுகின்றது. 

இதையும் படிங்க: பொண்ணுங்ககிட்டதான் அதெல்லாம் அதிகமா இருக்கும்.! ஆனா பசங்களுக்கு.. நடிகை சாய்பல்லவி ஓபன் டாக்!!

கடல் உணவுகள் :
வெளியில் சாப்பிடாமல் அவர்கள் வீட்டில் தான் அதிகம் சாப்பிடுகின்றனர். உடலுக்கு நல்ல உணவுகள் எது என்பதை அவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருப்பதால் அதற்கு ஏற்றவாறு உணவையும் அவர்கள் தேர்வு செய்து சாப்பிடுகின்றனர். அதிகப்படியாக கடல் பாசி, கொழுப்பு நிறைந்த மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடுகின்றனர். கடல் உணவுகளில் நிறைய தாதுக்களும், விட்டமின்களும் இருக்கிறது.

korean

நடந்து செல்லுதல் :
மேலும், இதில் நார்ச்சத்தும் இருப்பதால் இவர்களை அதிகமாக இளமையுடன் இருக்க இது உதவுகிறது. அவர்கள் நிறைய இடங்களுக்கு நடந்து செல்வதையே விரும்புகின்றனர். பொது போக்குவரத்து மூலம் பயணிக்கும் அவர்கள் பல இடங்களுக்கு காலால் நடந்து செல்வதால் அவர்களுக்கு உடல் எடை பிரச்சனை என்பதே இல்லாமல் மிகவும் அழகாக இருக்கின்றனர்.

இதையும் படிங்க: "பெண்களின் அழகைக் கெடுக்கும் பூனை முடி!" தீர்வு என்ன?!