"பெண்களின் அழகைக் கெடுக்கும் பூனை முடி!" தீர்வு என்ன?!

"பெண்களின் அழகைக் கெடுக்கும் பூனை முடி!" தீர்வு என்ன?!



How to remove face hair for females

பொதுவாக ஆண்களுக்கு முகத்தில் தாடி, மீசை இருப்பது போல் பெண்களுக்கும் கண்ணுக்கு தெரியாத அளவில் மிக மெல்லியதாக முடிகள் இருக்கும். கூர்ந்து கவனித்து பார்த்தல் தான் பெண்களின் முகத்தில் உள்ள முடிகள் தெரியும். ஆனால் ஒரு சில பெண்களுக்கு மட்டும் முகத்தில் அதிகமாக முடிகள் இருக்கும்.

Facial

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையால் தான் முகத்தில் இந்த முடிகள் வளர்கின்றன. இவற்றை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இயற்கை முறையில் நீக்கலாம். அவற்றை இங்கு பார்ப்போம். 

கஸ்தூரி மஞ்சள், சந்தனப்பொடி, சில துளிகள் எலுமிச்சை சாறுடன் கடுகு எண்ணெய் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்யவேண்டும். பின்னர் 20-30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம். 

Facial

மேலும் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் சோளமாவு, சர்க்கரை சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காய்ந்த பிறகு கழுவ வேண்டும். மேலும் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, மஞ்சள் தூள், மூன்று தேக்கரண்டி பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, பின்னர் காய்ந்ததும் கழுவ வேண்டும்.