வாவ்... குட்டீஸ் ஸ்பெஷல் ஹோம் மேட் மில்க் புட்டிங்.!! எளிமையான ரெசிபி.!!



kids-special-home-made-milk-puding-recipe

பள்ளி சென்று வரும் குழந்தைகள் வீடு திரும்பியதும் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதை அதிகம் விரும்புவார்கள். ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ் செய்து கொடுக்காமல் தினமும் விதவிதமான ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தால் அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் புது அனுபவமாகவும் இருப்பதோடு அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் அதிகம் விரும்பக் கூடிய மற்றும் சத்து நிறைந்த மில்க் புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Healthy Foodஇந்த மில்க் புட்டிங் செய்வதற்கு 1/2 லிட்டர் பால், 20 கிராம் சர்க்கரை, 60 கிராம் சோளம் மாவு மற்றும் 20 கிராம் பால் பவுடர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மில்க் புட்டிங் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் பால், சோள மாவு, சீனி மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை வைத்து அதில் நாம் கலந்தவற்றை ஊற்றவும்.

Healthy Foodஅடுப்பை சிம்மில் வைத்து அடிப்பிடிக்காதவாறு கலவையை நன்றாக கிளற வேண்டும். இதனைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் கழித்து பார்க்கும்போது கலவை நன்றாக கெட்டியான பதத்திற்கு வந்திருக்கும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு கலவையை நன்றாக ஆற வைக்கவும். சூடு நன்றாக ஆறியதும் ஒரு டிரேயில் மாற்றி சம அளவில் பரப்பி பிரிட்ஜில் வைத்து 2 மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மில்க் புட்டிங் ரெடி. வாங்க சாப்பிடலாம்.