குழந்தைகளுக்குப் பிடித்த சுவையான பிரட் ரோல்.! சிம்பிள் & ஈஸி ரெசிபி.!

குழந்தைகளுக்குப் பிடித்த சுவையான பிரட் ரோல்.! சிம்பிள் & ஈஸி ரெசிபி.!


kids-favourite-bread-roll-recipe

மாலை நேரம் டீ & காபியுடன் கிட்ஸ்க்கு குடுக்க ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீட்டு கிட்ஸ்க்கு குடுங்க மிச்சம் வைக்காம சாப்டுவாங்க.

tasty foodதேவையான பொருட்கள்
10 பிரெட்
2 முட்டை 
1 பாக்கெட் சீஸ் 
எண்ணெய் - தேவையான அளவு

tasty foodசெய்முறை: முதலில்  வைத்திருக்கும் பிரெட்டை சப்பாத்தி கட்டையில் வைத்து சப்பாத்தி தேய்ப்பது போல பிரெட்டை லேசாக தேய்த்து எடுத்து கொள்ள வேண்டும்.  பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு தேய்த்து வைத்துள்ள பிரெட் மீது சீஸ் ஸ்லைஸ்களை வைத்து பிரெட்டை ஒரு ரோலாக உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து ரோல்களை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும். ரோல் செய்து வைத்துள்ள பிரெட்டுகளை அடித்து வைத்துள்ள முட்டையில் நன்றாக படுமாறு பிரட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். நன்றாக முழுவதும் ரோல்கள் பொரிந்த வெந்த பிறகு சூடாக பரிமாறினால் சுவையான ஈஸி பிரெட் ரோல் தயார்.