எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கம்பு உப்புமா செய்வது எப்படி?.!

சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் கம்பில் இன்று உப்புமா எப்படி செய்வது என்று குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு - 1 கிண்ணம்
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 8
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு கருவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட கம்பை மிக்சியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அதனை சலித்து எடுக்க வேண்டும்.
★பின் கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும், கம்பு மாவை சேர்த்து மிதமான தீயில் வைக்க வேண்டும். வெங்காயம், கொத்தமல்லி, பச்சைமிளகாயை பொடிபொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
★அடுத்து மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
★இவை வதங்கியதும் நீர் ஊற்றி நன்கு கொதித்ததும் வறுத்த கம்பு, உப்பு சேர்த்து மிதமான தீயில் கிளற சுவையான கம்பு உப்புமா தயார். இறுதியாக கொத்தமல்லியை தூவி இறக்கி சாப்பிடலாம்.