
Indias most powerful three super womens
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி உலக மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களை அடிமைகளாக, சம உரிமை இன்றி நடத்திய காலம் மாறி இன்று பெண்களும் ஆண்களுக்கு நிகராக அணைத்து துறைகளிலும் சாதிக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவை பெருமையடைய வாய்த்த மூன்று சூப்பர் பெண்கள் பற்றித்தான் இங்கே பார்க்க உள்ளோம்.
1 . பிரதிபா பாட்டில்
பெண்களை அடிமைகளாக பார்த்த இதே நாட்டில் குடியரசு தலைவராக பொறுப்பேற்று ஒரு நாட்டையே ஒரு பெண்ணால் வழிநடத்தமுடியும் என்று நிரூபித்தவர் முன்னாள் குடியரசு தலைவி பிரதீபா பாட்டில்.
2 . கல்பனா சாவ்லா
இந்த நாட்டை மட்டும் இல்லை விண்வெளி வரை பெண்களால் சென்று அந்த விண்ணையும் எங்களால் ஆட்சி செய்யமுடியும் என்று நிரூபித்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
3 . அஞ்சலி குப்தா
அறிவில் மட்டும் பெண்கள் உயர்ந்தவர்கள் இல்லை, அறிவுடன் சேர்த்து வீரத்திலும் பெண்கள் உயர்ந்தவர்கள், பெண்களாலும் எதிரிகளுடன் போரிடமுடியும் என்று நிரூபித்தவர் அஞ்சலி குப்தா. இந்திய போர்விமானத்தில் பணியாற்றிய முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement