இந்தியா லைப் ஸ்டைல்

கள்ளக்காதலை தெரிந்து கொண்ட மனைவியை பால்கனியில் இருந்து தள்ளி கொலை செய்த கணவர்!

Summary:

husband killed wife for illegal affair

ஹரியானா மாநிலம் குர்க்ராமில் கடந்த மாதம் அக்டோபர் 27ம் தேதி தனது மனைவியை எட்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளி கணவர் கொலை செய்துள்ள சம்பவம் இப்போது தெரியவந்துள்ளது.

ஹரியானா மாநிலம் குர்க்ராமை சேர்ந்தவர்கள் தீபிகா சவுகான்(32) மற்றும் விக்ரம் சவுகான்(35). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 6 மாதமே ஆன ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் விக்ரம் சவுகானுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஷேபாலி பாஸின் என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் உருவாகியுள்ளது. விக்ரம் அடிக்கடி ஷேபாலியின் வீட்டிலே தங்கியுள்ளார். நாளடைவில் இந்த தொடர்பு தீபிகாவிற்கு தெரியவந்துள்ளது.

தீபிகா தன் கணவர் விக்ரமை பலமுறை கண்டித்தும் அவர் ஷேபாலியுடன் கொண்ட உறவை விடுவதாயில்லை. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

gurugram,valley view estate apartment murder,deepika chauhan

இதனை தொடர்ந்து கடந்த மாதம் அக்டோபர் 27ம் தேதி கர்வசவுத் விழா அன்று தீபிகா தன் கணவருக்காக விரதம் இருந்துள்ளார். அன்று விக்ரமின் பெற்றோர்களும் உடன் இருந்துள்ளனர். நீண்ட நேர்மை ஆகியும் விக்ரம் வீட்டிற்கு வராததால் தீபிகா கணவருக்கு போன் செய்துள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த விக்ரமிடம், தீபிகா தான் சென்று ஷேபாலியுடன் சண்டை போடா போவதாக தெரிவித்துள்ளார். அப்போது மனைவியை சமாதானப்படுத்திய விக்ரம், தனது பெற்றோர் வெளியில் சென்றவுடன் தன் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.

இந்த சண்டையில் இருவரின் கைகளிலும் கீறல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்ததால் இந்த சண்டை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. சிறிது நேரத்தில் விக்ரம் தனது கள்ள காதலிக்கு இங்கு நடந்தவைகளை பற்றி குறுந்செய்தி அனுப்பியுள்ளார். அதற்கு ஷேபாலி உன் மனைவியை கொலை செய்து விடு என்று பதில் அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு மீண்டும் தீபிகாவுடன் சாண்டியிட்டு விக்ரம் மனைவியை எட்டாவது மாடியில் உள்ள தனது வீடு பால்கனியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார். அப்போது தீபிகா "எனக்கு என் குழந்தைகளை மிகவும் பிடிக்கும், தயவு செய்து என்னை கொன்றுவிடாதே" என்று கெஞ்சியுள்ளார். ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத விக்ரம் மனைவியை கீழே தள்ளிவிட்டுள்ளான். இதில் சம்பவ இடத்திலே தீபிகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

arrest க்கான பட முடிவு

இதனை தொடர்ந்து விக்ரம் மற்றும் அவரது கள்ளக்காதலி ஷேபாலியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஷேபாலி ஆறு மாதம் கர்பமாக இருப்பதும், அவர் தான் விக்ரமை கொலை செய்ய தூண்டி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Advertisement