"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
குட்டீஸுக்கு பிடித்த உருளைக்கிழங்கு அல்வா வீட்டிலேயே செய்வது எப்படி?..! தாய்மார்களே அசத்துங்கள்.!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு அல்வா எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - அரை கிலோ பாதாம் - ஒரு கையளவு
சர்க்கரை - கால் கப்
பிஸ்தா - தேவைக்கேற்ப
நெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
★முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ள வேண்டும்.
★பின் பாதாம் மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
★ஒரு வானலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
★வதக்கும்போது நெய் சேர்த்துக் கொண்டே வதக்க வேண்டும். பின் அதில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறவும்.
★இறுதியாக அல்வா பதத்திற்கு வந்ததும் பாதம், பிஸ்தாவை சேர்த்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு அல்வா தயாராகிவிடும்.