எல்லாம் மனைவிக்காகவா.. நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக்கிய கணவர்.! ஏன்? எதனால்?Husband cut his tongue for wife

சத்தீஷ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள தானாடு கிராமத்தில் வசித்து வந்தவர் 33 வயது நிறைந்த ராஜேஸ்வர் நிஷாத். இவரது மனைவி வாய் பேச முடியாதவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டுக்கு பக்கத்தில் அமைந்துள்ள குளத்துக்கு சென்ற நிஷாத்
குளத்தின் கரையில் நின்று சில மந்திரங்களை உச்சரித்துள்ளார். 

நாக்கை வெட்டி காணிக்கை 

பின்னர் திடீரென கத்தி ஒன்றை எடுத்து தனது நாக்கை வெட்டி அதை கரையில் உள்ள ஒரு கல்லில் வைத்துள்ளார். மேலும் அவர் ரத்தம் சொட்ட அருகில் இருந்த சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மனைவிக்கு பேச்சு 

தகவலறிந்த போலீசார்கள் அங்கு விரைந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வாய் பேச முடியாத தனது மனைவிக்கு பேச்சு வர வேண்டும் என வேண்டியே அவர் தனது நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்க அவ்வாறு செய்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.