வாயில் எச்சிலை வரவழைக்கும் சுவையான வத்தக்குழம்பு.. கமகம மணத்துடன், சகல சுவையையும் கலந்து செய்வது எப்படி?.!

வாயில் எச்சிலை வரவழைக்கும் சுவையான வத்தக்குழம்பு.. கமகம மணத்துடன், சகல சுவையையும் கலந்து செய்வது எப்படி?.!



how-to-prepare-south-indian-kara-kuzhampu-or-vatha-kuzh

வத்தகுழம்பு என்று கூறினாலே பலருக்கும் வாயில் இடைவிடாது எச்சில் ஊற தொடங்கிவிடும். ஏனெனில் இனிப்பு, புளிப்பு, காரம் என பல சுவைகள் நிரம்பி காணப்படும். வத்தகுழம்பு யார் தான் சாப்பிடாமல் இருப்பார்கள். இன்று வத்தகுழம்பு செய்பவர்கள் செய்யும் முறை குறித்து காணலாம்.

தேவையான பொருள்கள் :

வெந்தயம் - 2 தேக்கரண்டி சுண்டைக்காய் - 1 கிண்ணம் 
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி 
மிளகு, பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
காய்ந்த மிளகாய் - 4 
புளி - 100 கிராம் 
சின்ன வெங்காயம் - 20 
வெல்லம் - 1 தேக்கரண்டி 
அரிசி - ஒரு தேக்கரண்டி 
கருவேப்பிலை - சிறிதளவு 
உப்பு மற்றும் நல்லெண்ணெய் - தேவையான அளவு

health tips

செய்முறை :

★முதலில் எடுத்துக் கொண்ட வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கிகொள்ள வேண்டும். பின்னர் வானொலியை அடுப்பில் வைத்து அதில் வெந்தயம் சேர்த்து வறுத்து பொடித்து எடுத்துக்கொள்ளவும்.

★அதே வானலியில் காய்ந்த மிளகாய், மிளகு, அரிசி, துவரம் பருப்பு, மல்லி, உளுந்தம்பருப்பு போன்றவற்றை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து குளிர்ந்த பின்னர் அதனையும் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

★மற்றொரு வானொலியில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிப்பதற்கு தேவையான பதார்த்தங்களை சேர்த்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். 

★வெங்காயம் நன்கு வதங்கியதும் சுண்டைக்காய் சேர்த்து வதக்கி, வெந்தய பொடியையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

★பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள பொடி ஆகியவற்றை சேர்த்து மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லம், கருவேப்பிலை, உப்பு, நீர் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிட்டு நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால் சுவையான வத்த குழம்பு தயார்.