அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பலாத்காரத்தால் 2 குழந்தைகளுக்கு தாயான 17 வயது சிறுமி; பேரம் பேசிய பெற்றோர்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த இருவர், வெவ்வேறு சம்பவத்தில் திருமணம் செய்வதாக பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் சிறுமி கர்ப்பமாகி இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகிய நிலையில், குழந்தை பிறந்ததும் இருவரும் சிறுமியை கைவிட்டு சென்றுள்ளனர்.

இவர்களில் ஒருவரிடம் சிறுமியின் பெற்றோர் குழந்தையை விற்பனை செய்து ரூ.4 இலட்சம் பணமும் பெற்றுள்ளனர். தற்போது இவ்விசயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியை காதலித்து ஏமாற்றியவர்கள், சிறுமியின் பெற்றோர், அவரின் மாமா, மருத்துவர் என 16 பேருக்கு எதிராக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.