செரிமான கோளாறை சரிசெய்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நெல்லி ஊறுகாய்..! இன்றே செய்து பாருங்கள்..!!

செரிமான கோளாறை சரிசெய்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நெல்லி ஊறுகாய்..! இன்றே செய்து பாருங்கள்..!!


How to prepare nelli pickle

செரிமான கோளாறை சரிசெய்யும் நெல்லி ஊறுகாய் எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

இந்தியா கலாச்சாரம் என்பது 28 மாநிலங்களிலும் பல்வேறு வகையான பாரம்பரியங்களை கொண்டது. இன்று குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய முறைப்படி தயாரித்து வழங்கப்படும் இனிப்பு, உப்பு, காரம் போன்ற சுவைகளை ஒருங்கிணைத்த நெல்லி சுண்டா. 

அதாவது நெல்லி ஊறுகாய் செய்வது குறித்து காணலாம். இதனை உண்பதால் செரிமான கோளாறு சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, இருமல் போன்ற பிரச்சனை உடலுக்கு ஏற்படாது.

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் - 7

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

வெல்லம் - 100 கிராம் 

சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

இஞ்சி - 1 துண்டு

உப்பு - 1/2 தேக்கரண்டி

தண்ணீர் - தேவைக்கு ஏற்ப

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

Latest news

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட நெல்லிக்காயை நன்றாக சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் 20 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

★பின்னர் அதன் விதைகளை நீக்கி ஆறவைத்து துருவிகொள்ள வேண்டும். 

★நெல்லிக்காய் துருவலோடு வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கிளறி வெல்லம் கரைந்ததும் இஞ்சி விழுது, மிளகாய் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக அடிபிடிக்காமல் கிளறிவிட வேண்டும். 

★இந்த கலவையோடு பெருங்காயத்தூளும் எலுமிச்சம்சாரும் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இறக்கும் தருவாயில் தாளிக்கும் விருப்பமுள்ளவர்கள் தாளித்தும் சாப்பிடலாம். தாளிக்காமல் அப்படியேவும் சாப்பிடலாம். இப்போது சுவையான நெல்லி ஊறுகாய் தயார்.