த்ரிஷாவை விட வயது குறைவு... ஆனால் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை! யார் தெரியுமா?
சுவையான பால்பன் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!

தென்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான சிற்றுண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் பால்பன், பலருக்கும் பிடித்தமான இனிப்பு பதார்த்தங்களில் முக்கியமான ஒன்றாகும். இன்று பால்பன் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1 கிண்ணம்,
சர்க்கரை - 1 கிண்ணம்,
ஏலக்காய் தூள் - 1 கரண்டி,
தயிர் கப் - கால் கப்,
நெய் - 2 கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
பேக்கிங் சோடா - சிறிதளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட சர்க்கரையை முக்கால் பங்கை மிக்சி சார்ஜில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் மைதா, ஏலக்காய், தயிர், பேக்கிங் சோடா, உப்பு, நெய் சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஹெல்த்தியான சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி? இப்படி ஒருமுறை ட்ரை பண்ணுங்க.!!
பின் கடாயில் மீதமுள்ள சர்க்கரை சேர்த்து, நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்னர், கலந்து வைத்திருக்கும் மாவை உருண்டையாக சேர்த்து பொறித்து சர்க்கரை பாகில் சேர்த்தால் சுவையான பால்பன் தயார்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக சேர்த்து பொரித்து எடுத்து சர்க்கரைப்பாகில் சேர்த்தால் சுவையான பால்பன் தயார்.
இதையும் படிங்க: சுவையான வெண்டைக்காய் துவையல் செய்வது எப்படி? டிப்ஸ் இதோ.!