சுவையான வெண்டைக்காய் துவையல் செய்வது எப்படி? டிப்ஸ் இதோ.!



  Vendaikai Thuvaiyal Tips Tamil 

வெண்டைக்காய் பலருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்று ஆகும். குழம்பு, பொரியல் என பல விதமாக செய்து சாப்பிடும் தன்மை கொண்ட வெண்டைக்காயை வைத்து துவையல் செய்தும் சாப்பிடலாம். இன்று வெண்டைக்காயில் சுவையான துவையில் செய்வது எப்படி என காணலாம். 

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - கால் கிலோ,

கடலை பருப்பு - 1 கரண்டி,

உளுந்தம் பருப்பு - 1 கரண்டி, 

வரமிளகாய் - 3 அல்லது 2, (காரத்திற்கேற்ப)

பெரிய வெங்காயம் - 2,

பூண்டு - 4 பற்கள்,

புளி - நெல்லிக்கனி அளவு,

கடுகு - 1 கரண்டி,

கறிவேப்பில்லை - சிறிதளவு, 

உப்பு - தேவையான அளவு.

எண்ணெய் - தேவையான அளவு.

Ladies finger recipe

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கால் பதம் வெண்டைக்காய் வெந்ததும் எடுத்து வைத்து, கடாயில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். 

இதையும் படிங்க: மசாலா பூண்டு சாதம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!

பின் இரண்டையும் கொரகொரப்பாக அல்லது மிருதுவாக உங்களின் விருப்பத்திற்கேற்ப மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். கொரகொரப்பாக அரைத்தால் சுவையாக இருக்கும். தோசை, இட்லிக்கு சாப்பிடுவோர் மிருதுவாக அரைத்துக்கொள்ளலாம்.

இவை நன்கு ஆறியதும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து இறக்கினால் சுவையான வெண்டைக்காய் துவையல் தயார்.

இதையும் படிங்க: மசாலா பூண்டு சாதம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!