மசாலா பூண்டு சாதம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!

நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் பூண்டை சுட்டு சாப்பிடலாம், சாம்பார், சாதாரண புளிக்குழம்பு போன்றவற்றில் 2 முதல் 5 எண்ணிக்கை சேர்த்து வேகவைத்து சாப்பிடலாம், காரக்குழம்புகளில் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். ஆனால், பூண்டில் சுவையான சாதம் செய்தது உண்டா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இத்துடன் இணைக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்
பூண்டு - 10 பற்கள்,
கொத்தமல்லிதூள் - 1 கரண்டி,
மிளகாய் தூள் - 2 அல்லது 3 கரண்டி, (உங்களின் காரத்திற்கேற்ப)
சீரகம் - 1/2 கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 3 கரண்டி,
எலுமிச்சை சாறு - சிறிதளவு,
கறிவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட பூண்டை தோல் உரித்து நன்கு இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் கொத்தமல்லிதூள், மிளகாய்தூள், மல்லித்தூள், சீரகம், சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: தலை முடி ஆரோக்கியத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? அசத்தல் டிப்ஸ் இதோ.!
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு-உளுந்து சேர்த்து தாளித்து, கறிவேப்பில்லை சேர்த்து கிளற வேண்டும். இவை வதங்கியதும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பூண்டு மசாலா கலவையை சேர்க்க வேண்டும்.
பின் மசாலா நன்கு கொதி வந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் லேசாக கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி, சாதத்துடன் கிளறி பரிமாறினால் சுவையான பூண்டு மசாலா தயார்.