ஹெல்த்தியான சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி? இப்படி ஒருமுறை ட்ரை பண்ணுங்க.!!



how-to-prepare-chapati-noodles

 

இன்றளவில் பெரும்பாலான வீடுகளில் இரவு நேரங்களில் சப்பாத்தி, கோதுமை தோசை, ரவா தோசை போன்றவை சமைத்து பரிமாறப்படுகிறது. அந்த வகையில், எப்போதும் சப்பாத்தி செய்து சலித்துபோனவர்கள் மற்றும் மீந்துபோன சப்பாத்தியை என்ன செய்வது என தெரியாமல் இருப்பவர்கள், சப்பாத்தியை நூடுல்ஸாக செய்வது குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள். 

தேவையான பொருட்கள்

சப்பாத்தி - 5,
முட்டை - 4,
பெரிய வெங்காயம் - 4,
முட்டை-4
தக்காளி - 2 அல்லது 3,
கடுகு உளுந்து - சிறிதளவு,
இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது - சிறிதளவு,
மஞ்சள் தூள் - அரை கரண்டி,
மிளகாய் தூள் - 1 கரண்டி,
மிளகு தூள் - 1 கரண்டி,
உப்பு - தேவையான அளவு.

இதையும் படிங்க: சுவையான வெண்டைக்காய் துவையல் செய்வது எப்படி? டிப்ஸ் இதோ.!

செய்முறை

முதலில் எடுத்துக்கொண்ட சப்பாத்தியை சுருட்டி, நூடுல்ஸ் போல மெல்லிய இடைவெளியுடன் வெட்டி தனித்தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். முட்டையில் ஒன்றை மீதம் வைத்து, மீதமுள்ளவற்றை பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு-உளுந்து, இஞ்சி - பூண்டு, பச்சை மிளகாய் அவற்றை முதலில் சேர்த்து வதக்க வேண்டும். பின் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும்.

இவை நன்கு வதங்கியதும் முட்டையை சேர்த்து கிளறிவிட்டு, பின் இறுதியாக சப்பாத்தி சேர்த்து, அதனுடன் மிளகுத்தூள், உப்பு, மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் தயார். 

இதையும் படிங்க: மசாலா பூண்டு சாதம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!