"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
கேரளா ஸ்டைல் தேங்காய் சாதத்தை இப்படி செய்து பாருங்கள்.. குழந்தைகள் கூட விரும்பி உண்ணுவாங்க.!
தேங்காய் சாதம் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாகும். இந்த சாதத்தை கேரளா ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
துருவிய தேங்காய் - 2 கப்
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு- சிறிதளவு
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
வரமிளகாய் - 8
முந்திரி - 1/4 கப்
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு குக்கரில் அரிசியை வைத்து மூன்று விசில் வரும் வரை வேக வைத்து சாதத்தை நன்கு ஆற வைக்க வேண்டும்
பின்பு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத்தூள் போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
பின் ஆற வைத்த சாதம் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கடாயில் போட்டு கிளற வேண்டும் இறுதியாக முந்திரி மற்றும் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி கால் மணி நேரம் மூடி வைக்கவும்.
இவ்வாறு செய்தால் சுவையான கேரளா ஸ்டைல் தேங்காய் சாதம் தயார் இந்த சாதத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.