10 நிமிடத்தில் ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரொட்டி செய்வது எப்படி?.. இன்றே செய்து அசத்துங்கள்..!!

10 நிமிடத்தில் ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரொட்டி செய்வது எப்படி?.. இன்றே செய்து அசத்துங்கள்..!!


how-to-prepare-cucumber-roti

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை அளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வெள்ளரிக்காய் ரொட்டி வீட்டிலேயே எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்திதொகுப்பு.

தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் - 2 

கொத்தமல்லி இலை - சிறிதளவு

எண்ணெய் - தேவைக்கேற்ப

உப்பு - தேவையான அளவு 

பச்சை மிளகாய் - 4 

ரவை - 1 கப் 

தேங்காய் - 3/4 கப்

 

health tips

செய்முறை :

★முதலில் வெள்ளரிக்காய் மற்றும் தேங்காயை நன்கு துருவி கொள்ள வேண்டும்.

★பின் கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

★ஒரு பாத்திரத்தில் துருவிய வெள்ளரிக்காய், தேங்காய், நறுக்கிய பச்சைமிளகாய், கொத்தமல்லி, ரவை ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரைமணி நேரம் மூடி வைக்கவும்.

★இறுதியாக தோசைகல்லை அடுப்பில் வைத்து சப்பாத்திகளாக திரட்டிய ரொட்டியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்தபின் பரிமாறினால் சுவையான ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரொட்டி தயார்.