அட அட.. நாவில் எச்சில் ஊறவைக்கும் ருசியான கேரட் துவையல் செய்வது எப்படி?..! இல்லத்தரசிகளே அசத்துங்கள்..!!
இட்லி, சப்பாத்தி, தோசை போன்ற உணவுகளுக்கு ருசியுடன் இருக்கும் கேரட் துவையல் என்று எப்படி செய்வது என காணலாம். கேரட் முகத்தின் பொலிவு அதிகரிக்க உதவி செய்கிறது.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 2
கொள்ளு - அறுபது கிராம்
பூண்டு - 2 பல்
உளுந்தம் பருப்பு - 2 கை அளவு
காய்ந்த மிளகாய் - 20
கடலை பருப்பு - ஒரு கையளவு
கருவேப்பிலை, கடுகு, உளுந்து - தேவையான அளவு

செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்ட வேண்டும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் மற்றும் கேரட் துருவல், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
அதேபோல மிளகாய்வற்றல், கொள்ளு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு போன்றவற்றை தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கேரட், வெங்காய கலவையுடன் உப்பு மற்றும் புளி சேர்த்து இலகுவாக மிக்ஸியில் அரைத்து, வறுத்த பருப்புகளையும் சேர்த்து அரைத்து கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து எடுத்தால் கேரட் துவையல் தயார்.