பரோட்டா எப்படி செய்யணும் தெரியுமா? வைரலாகும் சுட்டி குழந்தையின் ஸ்வீட் வீடியோ.
பரோட்டா எப்படி செய்யணும் தெரியுமா? வைரலாகும் சுட்டி குழந்தையின் ஸ்வீட் வீடியோ.

சிறு குழந்தை ஒன்று எப்படி பரோட்டா செய்யவேண்டும் என சொல்லிக்கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களால் வைரலாகவிருக்கிறது.
குழந்தைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகளின் கொஞ்சல் பேச்சும், அவர்களின் மழலை மொழியையும் கேட்டு ராசிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது என்றுதான் சொல்லவேண்டும். அதேநேரம் அந்த குழந்தை இன்னும் ஒருபடி மேலே சென்று நம்மை வியக்கவைக்கும் வகையில் ஏதாவது செய்தால் அது நம்மை மேலும் பிரமிப்படைய செய்துவிடும்.
அந்த வகையில் சிறு குழந்தை ஒன்று எப்படி ப்ரோட்டா செய்யவேண்டும் என கற்றுத்தரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. மேலும், தான் சொல்லிகொடும்போது கூடவே தன் பேச்சுக்கு இடையில் தன் அப்பாவிடம், நான் சரியா சொல்றனா அப்பா? எனவும் குழந்தை க்யூட்டாகக் கேட்டுக் கொள்கிறது. குறித்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.