"உங்களுக்கு கோபம் நிறைய வருமா? கோபத்தை குறைக்க என்ன பண்ணனும் தெரியுமா?!"

"உங்களுக்கு கோபம் நிறைய வருமா? கோபத்தை குறைக்க என்ன பண்ணனும் தெரியுமா?!"



How to control anger issue

கோபம் என்பது ஒரு இயற்கையான உணர்வு. இது பல்வேறு காரணங்களுக்காக ஒரு மனிதனுக்கு ஏற்படுகிறது. சிலவகை சூழ்நிலை அழுத்தங்கள் மனிதர்களுக்கு கோபத்தைக் கொடுக்கும். பெரும்பாலும் கோபத்திற்கு ஹார்மோன் மாற்றங்களே காரணமாக இருக்கின்றன.

Lifestyle

அதிகப்படியான கோபம் மிகப்பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கும். எனவே கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று இங்கு பார்ப்போம். கோபத்தில் இருக்கும்போது பேசுவதை யோசித்து பேசவேண்டும். இதனால் மற்றவர்களை காயப்படுத்துவதை தவிர்க்கலாம்.

மேலும் அமைதியாக இருக்கும்போது மற்றவர்களை காயப்படுத்தாமல் உங்கள் கவலைகளை வெளிப்படுத்தலாம். உடல் செயல்பாடு தான் மனஅழுத்தத்தைக் குறைக்கும். எனவே கோபம் அதிகரிக்கும்போது நடப்பது, ஓடுவது, அல்லது வேறு ஏதேனும் ஒரு செயலை செய்யலாம்.

Lifestyle

மனஅழுத்தம் ஏற்படும் நேரங்களில் ஒரு சிறிய இடைவெளி எடுத்து கொள்ளலாம். உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் செயலை யாரேனும் செய்தால் அங்கிருந்து விலகி விடுங்கள். உங்களால் மாற்ற முடியாத விஷயங்களை விட்டு விடுங்கள். எதிர்மறை உணர்ச்சிகளை விட்டு விடுங்கள். ஹ்