குழந்தை பெற்ற தாய்மார்களின் கவனத்திற்கு... தாய்ப்பால் கட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?



Home remedies for breastfeeding women's

பொதுவாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் கட்டி கொள்வது இயல்பான ஒன்று தான் என்றாலும் அவற்றை எப்படி சரி செய்வது என்ற அச்சம் பல பேருக்கு நிலவி வருகிறது. தாய்ப்பால் கட்டினாலும் அதை சரி செய்து கொள்ள உதவும் எளிமையான வீட்டு வைத்தியத்தை பற்றி இங்கு பார்ப்போம்.

1. தாய்ப்பால் கட்டி மிகவும் கனமாக உள்ள மார்பகத்தை மென்மையாக அழுத்தி, கட்டிய பாலை வெளியேற்றி விட வேண்டும்.
2. இரண்டு மார்பகத்திலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகத்தில் பால் கட்டிக் கொண்டு வலியும் ஏற்படும்.

Breastfeeding women's
3. தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளால் மார்பகங்களை மசாஜ் செய்யுங்கள்.
4. பெரிய முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து 2 நிமிடம் சுடுநீரில் போட்டு, அது சூடு ஆறிய பின் பிராவில் சொருகி வையுங்கள். தாய்ப்பால் கட்டுவது நிற்கும்.
5. உருளைக்கிழங்கை இரண்டாக அறிந்து, ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். சில்லென்று ஆன பிறகு, உங்களுக்கு எந்த இடத்தில் தாய்ப்பால் கட்டி இருக்கிறதோ அங்கு உருளைக்கிழங்கை வைத்து மசாஜ் செய்யுங்கள்.