வாய் துர்நாற்றத்தை போக்கனுமா.. இதை சாப்பிடுங்க போதும்.!

வாய் துர்நாற்றத்தை போக்கனுமா.. இதை சாப்பிடுங்க போதும்.!


Healthy remedies for bad breath

நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் பூண்டு, வெங்காயம் போன்றவை நமக்கு வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் அசைவம் சாப்பிட்ட பிறகும் வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே அதை சாப்பிட்ட பிறகு புதினா சுவை கொண்ட பானங்களை பலரும் அருந்துவர்.

Carrot

மேலும் வாய் துர்நாற்றம் ஏற்பட பொதுவான காரணம் பாக்டீரியாக்கள் தான். மோசமான உணவுப்பழக்கம், வளர்சிதை மாற்ற நோய்கள், மது மற்றும் புகையிலைப் பழக்கம் ஆகியவற்றால் வாய் துர்நாற்றம் ஏற்படும். மேலும் சிலருக்கு நாக்கில் உள்ள அழுக்கு, தொண்டையில் தொற்று, அசுத்தமான பற்கள் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில் நாம் கேரட் சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம். கேரட் கண்பார்வை ஆரோக்கியத்துக்கு சிறந்தது. மேலும் இது நார்ச்சத்து நிறைந்தது. இதை பச்சையாக உண்பதால் பற்களில் உள்ள ப்ளேக்கை அகற்ற உதவுகிறது.

Carrot

மேலும் கேரட்டில் உள்ள கால்சியம் பற்களை உறுதியாக்குகிறது. மேலும் இது வாய் துர்நாற்றத்தை போக்குவதோடு தாடை எலும்பையும் வலுவாக்குகிறது. தினமும் காலை, மாலை என இரண்டு முறை பல் துலக்குதல் தான் பற்களை ஆரோக்கியமாகப் பேண ஒரே வழி.