"இந்த விஷயங்களை எல்லாம் செய்யாதீர்கள்" உடல்நலம் மோசமாக பாதிக்கப்படலாம்..



Healthy lifestyle

பொதுவாக நாம் தினமும் செய்யும் சிறு சிறு தவறுகளால் நம் உடல் நலம் நமக்குத் தெரியாமலேயே பாதிக்கப்படுகிறது. இந்தப் பொதுவான சில தவறுகளைத் தவிர்த்து எப்படி ஆரோக்கியமாக வாழ்வது என்று இங்கு பார்ப்போம். தினமும் காலை எழுந்தவுடன் தண்ணீருக்கு தான் நம் உடல் ஏங்கும்.

Healthy

சிலருக்கு இரவில் தண்ணீர் தாகத்தினால் அடிக்கடி விழிப்பு ஏற்படும். எனவே டிஹைட்ரேஷன் என்பது மிகவும் அவசியம். தினமும் வெறும் வயிற்றில் காலையில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி விடும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

ஆனால் சாப்பிட்ட உடனேயே பல் துலக்க கூடாது. சாப்பிட்ட உடனேயே பல் துலக்கினால் பல் சிப்பியின் பாதுகாப்பு அடுக்கு சேதமாகும். எனவே ஒரு இரண்டு மணி நேரம் கழித்து பல் துலக்குவது நல்லது. அடுத்து சருமத்தை பாதுகாக்க 30 அல்லது அதற்கு மேற்பட்ட spf கொண்ட கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.

Healthy

மேலும் இரவு நேரத்தில் மொபைல் உபயோகிப்பது தூக்கத்தை தாமதப்படுத்தும். எனவே படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணிநேரம் முன்பாகவே மின்னணு சாதனங்களை தவிர்க்கவேண்டும். அதற்கு பதில் படிப்பது, இசை கேட்பது, தியானம் செய்வது போன்றவைகளை செய்யலாம்.