கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
தினமும் சிறிதளவு ஓமம் சாப்பிடுவதால் உடலில் நிகழும் மாற்றங்கள்..

தற்போதுள்ள காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவுகள் பெரும்பாலும் சத்துள்ளவையாக இருப்பதில்லை. மேலும் பல்வேறு கிருமிகள் மற்றும் நோய் தாக்குதல்கள் உடலில் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து வருகிறது.
அன்றாடம் நாம் உண்ணும் உணவில் பாஸ்ட் புட்களை அதிகம் உண்டு வருகிறோம். இதனால் ஜீரணமாகாமல் வயிற்றில் செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் மருத்துவரிடம் சென்று பல மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறோம்.
ஆனால் மருத்துவரிடம் செல்லாமல் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நம் பிரச்சினைகளை சரி செய்யலாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதாவது நம் வீட்டில் உள்ள ஓமம் வைத்து நம் வயிற்று பிரச்சனையை சரி செய்யலாம்.
ஓமம் எடுத்துக் கொள்வதன் மூலம் நோய்எதிர்ப்பு சக்தி பெருகும். மேலும் செரிமான பிரச்சனை சரியாக்கும். வாயு தொல்லை, சளி, இருமல், அல்சர் போன்ற பிரச்சனைகளை சரிப்படுத்தும். மேலும் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் ஓமத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.