மருத்துவம் லைப் ஸ்டைல்

மட்டன் பிரியரா நீங்கள்? ஆட்டுக்கறி சாப்பிட்டால் எண்ணலாம் நடக்கும் தெரியுமா?

Summary:

Health benefits of mutton curry in tamil

அசைவ ப்ரியர்களில் மட்டன் சாப்பிடாதவர்கள் மிகவும் குறைவுதான். மிகவும் சுவையான ஆட்டின் இறைச்சியானது தலை, இதயம், நுரையீரல், மூளை என அனைத்தும் மனிதர்களுக்கு மருத்துவ பயன் தருகிறது. ஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

தலை
ஆட்டின் தலை பகுதி எலும்பினை வலுப்படுத்தவும், இதயம் சார்ந்த பிரச்சனைகளை போகவும், உங்கள் குடலை வலிமையாகவும் உதவுகிறது.

ஆட்டுக்கால்கள்
ஆட்டின் கால்களை சூப்பு வைத்து குடிப்பதன் மூலம் நமது எலும்புகள் பலம்பெறுகிறது.

கண்
கண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது ஆட்டின் மூளை. கண் பார்வை குறை உள்ளவர்கள் ஆட்டுக்கறி சாப்பிடுவதன் மூலம் தெளிவான பார்வை பெற முடியும். மேலும் கண்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது.


மூளை
தாது விருத்தியை உண்டாக்குகிறது மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் பயன் தருகிறது. உங்கள் மூளை பகுதி நல்ல வலிமை பெற ஆட்டின் மூளை சாப்பிடலாம்.

மார்பு
கபத்தை நீக்கும். மார்புக்குப் வலிமையை தரும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் குணப்படுத்தும்.

இதயம்
இதயத்திற்குப் நல்ல பலம் தரும் மற்றும் மன ஆற்றல் அதிகரிக்க வெகுவாக பயன் தருகிறது ஆட்டின் இதயம்.

நுரையீரல்
உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு நல்ல வலிமையை தரும்.

கொழுப்பு
ஆட்டின் கொழுப்பு இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும்.

சிறுநீரகம்
இடுப்புக்கும், சிறுநீரக சுரப்பிக்கும் நல்ல வலிமை தரும். இடுப்பு வலி மற்றும் கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். தாது விருத்தியாகும். ஆண் குறிக்கு வலிமை தரும்.

நாக்கு
உடல் சூட்டை தணிக்கும். தோலுக்குப் வலிமை தரும் மற்றும் சருமம் பளபளக்க உதவும். உடலின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வளிக்கிறது .


Advertisement