புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மலச்சிக்கலை முற்றிலுமாக குணப்படுத்தும் மங்குஸ்தான்.. வேறு என்னென்ன நன்மைகள்.!?
ஊட்டச்சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் மங்குஸ்தான் பழம்
பொதுவாகவே பழங்களில் அதிகமான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது என்பது பலரும் அறிந்ததே. இதில் மங்குஸ்தான் பழம் (Mangosteen) உடல் உஷ்ணத்தை குறைப்பது முதல் உடலில் பல வகையான நோய்களை குணப்படுத்துவதில் சிறந்த பழமாகும். இந்த பழத்தின் ஊட்டசத்துகள் தலை முதல் கால் வரை பல நன்மைகளை தருகிறது. இதன் நன்மைகள் பின்வருமாறு:
மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள்
1. மங்குஸ்தான் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
2. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துகளை வழங்கி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
3. மங்குஸ்தானின் சாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.
4. இதில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் உடலில் இளமையான தோற்றத்தை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
5. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் மங்குஸ்தான் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் உடனடியாக குணமாகும்.
6. மேலும் செரிமான பிரச்சனையை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
7. தோலில் ஏற்படும் சுருக்கங்கள், மங்கு, தேமல் மறைய மங்குஸ்தான் பழத்தை அரைத்து தேய்த்து வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.
8. மங்குஸ்தான் உடலை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றது.
9. இதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும். இவ்வாறு மங்குஸ்தான் பழம் பல வகையான நன்மைகளை தருகிறது.
இதையும் படிங்க: நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் டீடாக்ஸ் பானம்.. எப்படி செய்யலாம்.!?
இதையும் படிங்க: தலைமுடி உதிர்வு பிரச்சனையா.? இந்த பாரம்பரிய எண்ணையை ட்ரை பண்ணி பாருங்க.!?