15 லட்சத்தை சாப்பிட்ட ஆட்டுக்குட்டி! ஆத்திரத்தில் ஆட்டை வெட்டி விருந்து வைத்த விவசாயி

15 லட்சத்தை சாப்பிட்ட ஆட்டுக்குட்டி! ஆத்திரத்தில் ஆட்டை வெட்டி விருந்து வைத்த விவசாயி


goat-ate-20k-euro-of-serbian-farmer

செரிபியாவில் புதிதாக நிலம் வாங்குவதற்காக விவசாயி ஒருவர் சேர்த்து வைத்த 20 ஆயிரம் யூரோ மதிப்புள்ள பணத்தை அவர் வீட்டில் வளர்த்து வந்த ஆடு ஒன்று தின்றுவிட்டது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 15 இலட்சத்திற்கும் மேல். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி ஆட்டினை வெட்டி பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

செரிபியா நாட்டில் ரணிலாவிக் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பம் புதிதாக நிலம் வாங்குவதற்காக பல நாட்களாக பணம் சேமித்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் தங்கள் வீட்டில் சில ஆடுகளையும் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 20 ஆயிரம் யூரோ பணத்தை சேர்த்தவர்கள் 10 ஹெக்ட்டர் நிலத்தை வாழ்வதற்கு தயாராகினர். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வளர்த்த பெல்கா என்ற வெள்ளை ஆடு செய்த செயலால் அவர்களின் மொத்த கனவும் கலைந்துபோனது.

goat ate 20k euro

அந்த சோகமான சம்பவம் நடைபெற்ற நாளில் அவர்களிடம் நிலத்தை விற்கும் நபர் வீட்டிற்கு வந்து பணத்தை பெற்றுக் கொண்டு நிலத்திற்கான பத்திரங்களை அளிப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார். இதனால் அன்று காலை சீக்கிரமே எழுந்த அந்த குடும்பத்தினர் நிலம் வாங்குவதற்காக சேமித்த பணத்தை ஒன்றாக சேர்த்து எண்ணி ஒரு மேஜையின் மேல் வைத்துள்ளனர். பின்னர் அனைவரும் காலை உணவை சாப்பிடுவதற்காக டைனிங் ரூமிற்கு சென்றுவிட்டனர்.

அந்த நேரத்தில் அந்த விவசாயியின் வயதான தந்தை ஆடுகளுக்கு இறை வைப்பதற்காக கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றுள்ளார். வெளியில் சென்ற அவர் கதவை மூடுவதற்கு மறந்து விட்டார். அப்பொழுது வெளியில் நின்று கொண்டிருந்த பெல்கா என்ற அந்த வெள்ளாடு வீட்டிற்குள் நுழைந்து மேஜையின் மேல் வைத்திருந்த 20 ஆயிரம் யூரோ பணத்தையும் சாப்பிட்டு கொண்டிருந்தது. இந்த சத்தத்தை கேட்டு வீட்டின் உள்ளே இருந்தவர்கள் ஓடி வந்து பார்ப்பதற்குள் மொத்தப் பணத்தையும் பெல்கா சாப்பிட்டு விட்டது. வெறும் 300 யூரோ பணம் மட்டுமே அவர்களுக்கு மிச்சம் வைத்தது பெல்கா.

goat ate 20k euro

இதனால் புதிதாக நிலம் வாங்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்த மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. இந்த தகவலை அறிந்து அவர்களிடம் இதைப் பற்றி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அந்த விவசாயி 20 ஆயிரம் யூரோ மதிப்புள்ள பணத்தை தின்ற பெல்கா என்ற அந்த ஆட்டையே வெட்டி விருந்து வைத்துள்ளார்.