தமிழகம் லைப் ஸ்டைல்

பெண் பார்க்க வந்த வாலிபரிடம் நூதன கொள்ளை; கைவரிசையை காட்டிய பெண்கள்!

Summary:

girls stolen gold and mobile from a man

சென்னை வட பழனியில் பெண் பார்க்க சென்ற வாலிபரிடம் செல்போன், தங்கம், ஏடிஎம்., உள்ளிட்ட பொருட்களை பெண்கள் திருடிச் சென்றதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

42 வயதான காளிசரண் அரும்பாக்கத்தில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வயதாகியும் திருமணம் ஆகாத காரணத்தால் இவர் இணையதளம் மூலம் பெண் தேடி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு திருமண தகவல் இணையதளம் மூலம் ஒரு பெண்ணை பார்த்துள்ளார். உடனே அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய அவர் நேரில் சந்திக்கலாமா எனக் கேட்டுள்ளார் அதற்கு அந்த பெண் சம்மதிக்கவே அவர்கள் வடபழனி பொன்னம்மாள் தெருவில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அங்கு சென்ற காளிசரனிடம் இரண்டு பெண்கள் வந்து பேசியுள்ளனர். அவர் பார்க்க வந்த பெண் அருகில் ஒரு வீட்டில் இருப்பதாக கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டிற்குள் சென்றதும் காளிசரண் அணிந்திருந்த தங்க நகைகள் (4 பவுன்), ஏ.டி.எம்., கார்டுகள், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை அவரிடமிருந்து மிரட்டி பிரித்துள்ளனர்.

இதனையடுத்து அலறிப்போய் அங்கிருந்து தப்பி வந்த, காளிசரண், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


Advertisement